உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பாலியல் தொல்லை காமுக வாலிபர் கைது

 பாலியல் தொல்லை காமுக வாலிபர் கைது

காமாட்சிபாளையா: சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்களுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த காமுக வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். பெங்களூரு சீனிவாசநகரில் வசிக்கும், 26 வயது பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டரில் பீன்யாவுக்கு சென்றார். அவரது கணவர் காரில் பின்தொடர்ந்து வந்தார். காமாட்சிபாளையா பகுதியில் சென்ற போது சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் ஸ்கூட்டரை பெண் மெதுவாக ஓட்டினார். திடீரென ஸ்கூட்டர் முன்பு வந்து நின்ற வாலிபர் ஒருவர், பெண்ணின் உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இதை பார்த்து, காரில் வந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். காரில் இருந்து இறங்கி, வாலிபரை பிடிக்க முயன்றார். அவர் தப்பி ஓடினார். இதுகுறித்து 112 எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். அங்கு வந்த ஹொய்சாளா போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹீரோஹள்ளியின் மாதேஸ்வர நகரை சேர்ந்த வினோத், 27, என்பவரை கைது செய்தனர். விசாரணையில், இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு, பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்து உள்ளது. இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது இருந்தால் புகார் செய்யலாம் என்று, போலீசார் அழைப்பு விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ