சித்தராமையாவுடன் சிவகுமார் சந்திப்பு
பெங்களூரு: முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் நிறைவான நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவை, முதல்வர் சிவகுமார் தன் குடும்பத்திருடன் நேற்று வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது, சிவகுமாரின் மனைவி உஷா, அவரது தம்பி சுரேஷ் உடன் இருந்தனர். நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர். இது தொடர்பான படங்களை வெளியிட்ட முதல்வர் சிவகுமார், 'வலிமையான, முற்போக்கான கர்நாடகாவை கட்டியெழுப்புவதில் அவரது வழிகாட்டுதல்கள் எனக்கு தேவை. அவரது ஆசீர்வாதம், வழிகாட்டுதலுக்கு நன்றி' என, தெரிவித்துள்ளார்.