உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிறுமி பலாத்காரம் எஸ்.ஐ., கைது

 சிறுமி பலாத்காரம் எஸ்.ஐ., கைது

கார்வார்: சமூக வலைதளம் மூலம் பழக்கமான சிறுமியை, பலாத்காரம் செய்து மிரட்டிய, எஸ்.ஐ., கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர கன்னடாவின் மங்கி போலீஸ் நிலைய எஸ்.ஐ., அபிநந்தன் கவுடா, 35. இவருக்கும், எல்லாபூரில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும், சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் பட்கல் டவுனுக்கு சிறுமியை, அபிநந்தன் வரவழைத்தார். அப்பகுதியில் உள்ள லாட்ஜிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியே சொல்ல கூடாது; யாரிடமாவது கூறினால் கடுமையான பின்விளைவை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். ஆனாலும் பாதிக்கப்பட்ட சிறுமி, தன் பெற்றோரிடம் கூறினார். அவர்கள் பட்கல் டவுன் போலீசில் புகார் செய்தனர். 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அபிநந்தன் கவுடாவை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை