உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., ஆஜர்

எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., ஆஜர்

பெங்களூரு: எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜரானார்.கர்நாடகாவில் 2022ல் 545 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் 2023ல் வெளியிடப்பட்டன. முறைகேடு செய்து தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெற்றது, பின்னர் தெரியவந்தது.இதுதொடர்பான வழக்கில் ஆள்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அம்ருத் பால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், முறைகேடு செய்து வெற்றி பெற்ற தேர்வர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு எஸ்.ஐ., தேர்வு முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 545 இடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்பட்டது.இதற்கிடையில் தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற, ராம்நகர் மாகடியை சேர்ந்த தர்ஷன் என்பவர், மல்லேஸ்வரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணாவின் உறவினர் என்றும், தர்ஷனை தேர்வில் வெற்றி பெற வைத்ததில் அவருக்கு பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி அஸ்வத் நாராயணாவுக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பி இருந்தனர். நேற்று முன்தினம் மாலை சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் அஸ்வத் நாராயணா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விசாரித்துவிட்டு அனுப்பி வைத்தனர்.'எஸ்.ஐ., தேர்வு முறைகேட்டுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் யாரையும் வெற்றி பெற வைக்கும்படி கூறவில்லை' என, அஸ்வத் நாராயணா, சிறப்பு புலனாய்வு குழு முன்பு கூறியதாக தகவல் வெளியானது.உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:அஸ்வத் நாராயணாவை, சிறப்பு புலனாய்வு குழு ஏன் விசாரணைக்கு அழைத்தது என்று எனக்கு தெரியாது. வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை.விசாரணையின்போது பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், யார் யாரிடம் விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நினைக்கிறார்களோ, அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை