உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கல்லுாரி மாணவி தற்கொலை வழக்கு அலட்சிய எஸ்.ஐ., சஸ்பெண்ட்

 கல்லுாரி மாணவி தற்கொலை வழக்கு அலட்சிய எஸ்.ஐ., சஸ்பெண்ட்

கார்வார்: ம.ஜ.த., பெண் தொண்டரின் மகன் துன்புறுத்தலால், கல்லுாரி மாணவி தற்கொலை செய்த வழக்கில், பணியில் அலட்சியம் காட்டிய எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரகன்னடாவின் கார்வார் அருகேயுள்ள கத்ரா பகுதியில் வசிக்கும் ரீனா மகள் ரிச்செல் டிசோசா, 19. தனியார் கல்லுாரியில் படித்து வந்த இவர், கடந்த, 9ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு கத்ரா பகுதி ம.ஜ.த., பெண் தொண்டர் சைத்ராவின் மகன் சிராக் தான் காரணம் என, கடிதம் எழுதி வைத்திருந்தார். இக்கடிதத்தின் அடிப்படையில், சிராக் மீது வழக்கு பதிவானது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடுகின்றனர். இந்நிலையில், மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேகம் உள்ளதாகவும், மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் ரிச்செல் டிசோசா தற்கொலை செய்வதற்கு சில தினங்களுக்கு முன், சிராக் அனுப்பிய குறுந்தகவல்களை போலீசிடம் கொடுத்த பெற்றோர், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், எஸ்.ஐ., சுனில் பண்டிவாடர் புகாரை வாங்கிக் கொண்டு வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியமாக இருந்தார். இதுகுறித்து உத்தர கன்னடா மாவட்ட எஸ்.பி., தீபன் கவனத்திற்கு, ரிச்செல்லின் பெற்றோர் கொண்டு சென்றனர். எஸ்.பி., நடத்திய விசாரணையில், எஸ்.ஐ., தனது பணியில் அலட்சியமாக செயல்பட்டது தெரிய வந்தது. நேற்று அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை