உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வீண் செலவு செய்யும் சித்தராமையா மேல்சபையில் விஸ்வநாத் பாய்ச்சல்

 வீண் செலவு செய்யும் சித்தராமையா மேல்சபையில் விஸ்வநாத் பாய்ச்சல்

பெங்களூரு: ''மக்களின் வரிப்பணத்தை, முதல்வர் சித்தராமையா வீணாக செலவிடுகிறார். வரிப்பணம் மக்களுக்கு பயன்பட வேண்டும்,'' என, மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் விஸ்வநாத் வலியுறுத்தினார். மேல்சபையில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில், விஸ்வநாத் பேசியதாவது: ம க்களின் வரிப்பணம், அவர்களின் தேவைக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். ஆனால் முதல்வர் சித்தராமையா, பணத்தை தேவையற்ற செலவுகளுக்கு பயன்படுத்தி வீணாக்குகிறார். காங்கிரஸ் தலைவர்களை, கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர்களாக்கி, அவர்களுக்கு அமைச்சர் பதவிக்கு நிகரான அந்தஸ்து வழங்கியுள்ளார். பெங்களூரில் இருந்து, மைசூருக்கு சாலை வழியாக சென்றாலே, ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால் முதல்வர் சித்தராமையா, ஒவ்வொரு முறையும் சிறப்பு விமானம் பயன்படுத்துகிறார். இதற்காகவே 38 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். மைசூரில் இருந்து, ஹுன்சூரு 40 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு செல்லவும் சிறப்பு விமானத்தில் பயணிக்கிறார். இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி, இண்டிகோ விமானத்தில் டில்லிக்கு பயணிக்கின்றனர். ஆனால் சித்தராமையா தனி விமானத்தில் பயணிக்கிறார். எளிமையான வாழ்க்கையை, அவர் மறந்து விட்டார். இவ்வாறு அவர் பேசினார். முந் தைய பா.ஜ., அரசில் முதல்வராக இருந்தவர்களும், சிறப்பு விமானத்தில் பயணித்துள்ளனர். தங்களின் பயணம் மற்றும் பாதுகாப்புக்காக, இன்றைய முதல்வரை விட, அதிகம் செலவிட்டுள்ளனர். அரசியல் உள்நோக்கத்தில், இதுபோன்று குற்றம்சாட்ட கூடாது. - சலீம் அகமது, காங்கிரஸ் தலைமை கொறடா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !