உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பாரில் கோஷ்டி மோதல் மென் பொறியாளர் பலி

 பாரில் கோஷ்டி மோதல் மென் பொறியாளர் பலி

மைசூரு: மைசூரு மாவட்டத்தின், கோகுலம் லே - அவுட்டில் வசித்தவர் நிஷாந்த், 32. இவர் பெங்களூரின் தனியார் நிறுவனத்தில், மென் பொறியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மைசூருக்கு வந்திருந்த இவர், பார்ட்டி நடத்தும் நோக்கில், விஜயநகரின் இரண்டாவது ஸ்டேஜில் உள்ள, 'பர்ப்பிள் ஹெஜ் ரெஸ்டாரென்ட்'டுக்கு நண்பர்கள் சந்தீப், தீக்ஷித்துடன் வந்திருந்தார். நள்ளிரவு பார்ட்டியை முடித்து கொண்டு, வெளியே வரும் போது ராக்கி என்பவரும், அவரது நண்பர்களும் எதிரே வந்தனர். ஏதோ காரணத்துக்காக இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் நிஷாந்த், இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிஷாந்தை, மாடியில் இருந்து தள்ளி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விஜயநகர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை