உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எனக்கு பதவி கொடுப்பது பற்றி மேலிடம் முடிவு செய்யும் சபாநாயகர் காதர் கருத்து

 எனக்கு பதவி கொடுப்பது பற்றி மேலிடம் முடிவு செய்யும் சபாநாயகர் காதர் கருத்து

மங்களூரு: கர்நாடக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என, கூறப்படும் நிலையில், சபாநாயகர் காதருக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, மங்களூரில் சபாநாயகர் காதர், அளித்த பேட்டி: அடுத்து என்ன நடக்கும் என்பது, எனக்கு தெரியாது. அதை காலமே தீர்மானிக்கும். தற்போது நான் சபாநாயகராக இருக்கிறேன். வரும் நாட்களில் என்ன ஆவேன் என்பதை, இப்போதே கூற முடியாது. நான் துணை முதல்வராவேன் என, ஊடகங்களில் சர்ச்சை நடக்கிறது. நேரம் வரும் போது, அனைத்தும் தெரியும். அரசு எப்போது சட்டசபை நடத்த முடிவு செய்கிறதோ, அப்போது நடக்கும். யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதை, ஆளுங்கட்சியின் முக்கிய தலைவர்கள் முடிவு செய்வர். எனவே நான் துணை முதல்வராக வேண்டும் என, யாரும் சோஷியல் மீடியாவில் போஸ்ட் போடாதீர்கள். யார் முதல்வராக வேண்டும், யார் அமைச்சர்களாக வேண்டும் என்பதை, கட்சிதான் முடிவு செய்யும். அனைத்து விஷயங்களையும், நான் உங்கள் முன்னிலையில் கூறினால், ரகசியம் அம்பலமாகாதா, அனைத்து விஷயங்களையும், கட்சியும், தலைவர்களும் முடிவு செய்யட்டும். இன்று மகிழ்ச்சியோடு பண்டிகை கொண்டாடுவோம். உங்களுக்கு உங்கள் மூலமாகவே நல்ல செய்தி வரும். நான் பெங்களூருக்கு செல்வது பற்றி, இன்னும் முடிவு செய்யவில்லை. இன்று பண்டிகை கொண்டாடுவது, என் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை