உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

பெங்களூரு: 'தமிழகம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழாவை முன்னிட்டு, ஆக., 29 முதல் செப்., 8ம் தேதி வரை பக்தர்களுக்கு வசதியாக வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது: தமிழகம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா, ஆக., 29 முதல் செப்., 8ம் தேதி வரை நடக்கிறது. இத்திருவிழாவில் பங்கேற்க கோவா, கர்நாடகா உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர். ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி இரு வழித்தடத்திலும் தலா மூன்று டிரிப்புகள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ரயில் 07361: வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி விரைவு ரயில், ஆக., 27, செப்., 1, 6 ஆகிய தேதிகளில், வாஸ்கோடகாமாவில் இருந்து இரவு 9:55 மணிக்கு புறப்பட்டு, முறையே ஆக., 29, செப்., 3, 8ம் தேதிகளில் வேளாங்கண்ணிக்கு அதிகாலை 3:45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் எண் 07362: வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா விரைவு ரயில், ஆக., 29, செப்., 3, 8 ம் தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு, முறையே ஆ., 31, செப்., 5, 10ம் தேதிகளில் அதிகாலை 3:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும். l ரயில் எண் 12027 / 12028: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை - கே.எஸ்.ஆர்., சதாப்தி விரைவு ரயிலில், வரும் 27ம் தேதி முதல் கூடுதலாக ஒரு 'ஏசி' பெட்டி இணைக்கப்பட்டு உள்ளது. முன்பு 17 பெட்டிகள் இருந்தன; தற்போது 18 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 டிரிப் நீட்டிப்பு l எண் 06587: யஷ்வந்த்பூர் - ஷிவமொக்காவின் தாலகுப்பா விரைவு ரயில், ஆக., 1, 8ம் தேதிகளில் யஷ்வந்த்பூரில் இருந்து வெள்ளிக்கிழமைகளில், இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:15 மணிக்கு தாலகுப்பா சென்றடையும். l மறுமார்க்கத்தில் எண் 06588: தாலகுப்பா - யஷ்வந்த்பூர் விரைவு ரயில், ஆக., 2, 9ம் தேதிகளில் தாலகுப்பாவில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 8:15 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:50 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை