| ADDED : நவ 21, 2025 06:17 AM
வசந்த் நகர்: பெங்களூரு வசந்த் நகரில் இன்று முதல் 23ம் தேதி வரை, சாஸ்தா பிரீத்தி நடக்கிறது. ஸ்ரீ தர்மசாஸ்தா லட்சார்ச்சனை அறக்கட்டளை சார்பில், 57ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தியை ஒட்டி, வசந்த் நகர் சர்தார் பட்டேல் பவனில் நடக்கும் விழாவில் இன்று அதிகாலை கணபதி ஹோமம், சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. வில்லிவாக்கம் சிவராஜ் சர்மா குழுவினரின் ஸ்ரீ அய்யப்ப பஜனை சங்கத்தின் தோடயமங்கலம், குரு கீர்த்தனை, சாஸ்த்ரு அஷ்டபதிக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில் ஜானவாசம், ஸ்ரீ ஹரிஹரிபுத்ரா அகண்ட அபிநய திவ்யநாமம், தீப பிரதக் ஷனம், தோலோத்சவத்துக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. வரும் 22ம் தேதி காலையில் சம்பிரதாய உஞ்சவிருத்தி, வில்லிவாக்கம் சிவராஜ் சர்மா குழுவினரின் ஸ்ரீ அய்யப்ப பஜனை சங்கத்தின் ஸ்ரீசாஸ்தா திருக்கல்யாணம்; மதியம் தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில் அகில பாரதிய அய்யப்ப தர்ம பிரசார சபை தலைவர் அய்யப்ப தாஸ் கவுரவிக்கப்படுகிறார். சிதம்பரம் பாகவதர் குழுவினரின் பஜனை; இரவில் தீபாராதனை, ஹரிவராசனத்துக்கு பின் பிரசாதம் வழங்கப்படுகிறது. வரும் 23ம் தேதி காலையில் ராஜேஷ் வாத்தியாரின் ருத்ராபிஷேகம்; கொச்சி ஸ்ரீரங்கனின் வஞ்சிபாட்டு; அய்யப்பனுக்கு லட்சார்ச்சனை; புஷ்பாஞ்சலி, ஆஞ்சநேய வடை மாலை அணிவித்து, தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. கேரளா ஆலப்புழையின் வெங்கிடேஸ்வரனின் வரவு பாட்டுக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.