மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா
19-Jun-2026
கோலார்: கோலாரில், வரும் ஜூலை 5ல் சிறுவர், சிறுமியருக்கு மாநில அளவிலான திறந்த நிலை விரைவு சதுரங்க போட்டி நடக்கிறது. கோலார் ஜூனியர் கல்லுாரி அருகே உள்ள இளைஞர்கள் சேவை மைய உள்விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான சதுரங்க போட்டி, ஜூலை 5ல் நடத்த, கோலார் மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதில், 9 முதல், 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியருக்கான போட்டி நடத்தப்படும். நுழைவு கட்டணம் 500 ரூபாய். மேலும், தகவல் அறிய 9141798415 மற்றும் 9036336752 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
19-Jun-2026