மேலும் செய்திகள்
சிங்கம்புணரியில் குறையும் நிலத்தடி நீர்மட்டம்
04-Mar-2026
டாக்சிக் - டீசர் | Toxic Official Tamil Teaser
20-Feb-2026
பெங்களூரு: ''நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது அவசியமானது,'' என, அமைச்சர் எம்.சி.சுதாகர் கூறினார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஹனுார் தொகுதி ம.ஜ.த., உறுப்பினர் மஞ்சுநாத் எழுப்பிய கேள்விக்கு, சிறிய நீர்பாசனத்துறை அமைச்சர் போசராஜ் சார்பாக, உயர்கல்வி அமைச்சர் சுதாகர் அளித்த பதில்: நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, நீர்பாசனத்துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குளங்கள் அமைப்பது, தடுப்பணை கட்டுவது, ஏரிகளுக்கு நீர் நிரப்புவது உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. மாநிலம் முழுதும் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது அவசியமானது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஹனுார் தொகுதிக்கு, சிறிய நீர்பாசன துறை அதிக நிதி ஒதுக்கி உள்ளது. இந்த பட்ஜெட்டிலும், 490 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
04-Mar-2026
20-Feb-2026