உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  திருடு போன ரூ.1.75 கோடி மொபைல் போன்கள் மீட்பு

 திருடு போன ரூ.1.75 கோடி மொபைல் போன்கள் மீட்பு

பெங்களூரு: காணாமல் மற்றும் திருட்டு போன 1.75 கோடி ரூபாய் மதிப்புள்ள 692 மொபைல் போன்களை போலீசார் மீட்டனர். பெங்களூரு சிட்டி போலீசார் வெளியிட்ட அறிக்கை: பெ ங்களூரு வடக்கு பிரிவு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில், மொபைல் போன்கள் காணாமல், திருட்டு போனதாக வழக்குகள் பதிவாகின. இது, தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்பட்டது. இதில், 1.75 கோடி ரூபாய் மதிப்புள்ள 672 மொபைல் போன்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட போன்கள், அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மொபைல் போன் தொலைந்து, திருட்டு போனால் உடனடியாக புகார் அளிக்கவும். சைபர் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. எனவே, அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவும். பம்பர் பரிசு, லாட்டரி போன்றவற்றை நம்பி பணத்தை இழக்க வேண்டாம். பண சூதாட்ட செயலிகளிலேயே அதிகளவு சைபர் மோசடிகள் நடக்கின்றன. சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்தப்படும் அங்கீகரிக்கப்படாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். தற்போது, இலவச கோடை சுற்றுலா எனும் பெயரில் சைபர் மோசடி நடக்கிறது. அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் 'வாட்ஸாப்' மெசேஜ்களுக்கு பதிலளிக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !