உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

பெலகாவி: இரண்டு குழந்தை திருமணங்களை, 'அக்கா படை' போலீசார் தடுத்து நிறுத்தினர். பெலகாவி நகரில் உள்ள வந்தமுரி காலனியில், 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும், பெலகாவியின் ஷாபூரில் 13 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும், 'அக்கா படை'க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இரண்டு இடங்களிலும் அக்கா படை போலீசார், சோதனை நடத்தினர். இரண்டு குழந்தை திருமணங்களும் நிறுத்தப்பட்டன. திருமணத்தை ந டத்த மு யன்ற சிறுமியரின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரு குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய அக்கா படைக்கு, பெலகாவி நகர் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை