உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தேர்வில் காப்பியடிப்பதை தடுத்த உதவி பேராசிரியரை தாக்கிய மாணவர்

 தேர்வில் காப்பியடிப்பதை தடுத்த உதவி பேராசிரியரை தாக்கிய மாணவர்

கலபுரகி: கலபுரகியியல், ஹோமியோபதி கல்லுாரியில் நடந்த தேர்வில், மொபைல் போன் மூலம் காப்பி அடித்த மாணவரை உதவி பேராசிரியர் வெளியேற்றியதால், கோபமடைந்த அம்மாணவர் உதவி பேராசிரியரை கடுமையாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. கலபுரகி நகரில், டாக்டர் மாலகா ரெட்டி ஹோமியோபதி மருத்துவ கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் கடந்த, 18ம் தேதி, 'ஹோமியோபதி மெட்டிரியா மெடிகா' தேர்வு நடந்தது. அப்போது, ஷாபாஸ் என்ற மாணவர், தனது மொபைல் போனை வைத்து, காப்பி அடித்துக் கொண்டிருந்தார். தேர்வு அறையில் மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த உதவி பேராசிரியர் சிவராஜ் குமார், இதை கண்டுபிடித்தார். உடனடியாக மாணவரின் விடைத்தாளை பறித்ததுடன், அவரை தேர்வு அறையை விட்டு வெளியேறும்படியும் கூறினார். இதனால், கோபம் அடைந்த மாணவர் ஷாபாஸ், உதவி பேராசிரியரை கடுமையா க தாக்கினார். அதிர்ச்சி அடைந்த சக பேராசிரியர்களும், மாணவர்களும், ஷாபாசையும், சிவராஜ் குமாரையும் விலக்கினர். பின், அந்த மாணவர் தேர்வு அறையை விட்டு வெளி யேறினார். இந்தச் சம்பவம் அனைத்தும் தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. மாணவரின் பெற்றோருக்கு இந்த விபர த்தை தெரிவித்த கல்லுாரி நிர்வாகம், இனி மாணவரை தேர்வு எழுத அனுமதிப்பதில் லை என்று முடிவு செய்துள்ளது. தன்னை தாக்கிய மாணவர் மீது, உதவி பேராசிரியர் சிவராஜ் குமார், இதுவரை எந்த புகாரும் அளிக்க்கவில்லை. ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவரை, கல்லுாரியில் இருந்து நீக்குவது குறித்தும் கல்லுாரி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை