உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பஸ்சுக்காக காத்திருந்த மாணவி கூட்டு பலாத்காரம்

பஸ்சுக்காக காத்திருந்த மாணவி கூட்டு பலாத்காரம்

ராய்ச்சூர்: பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி மாணவியை, மர்ம நபர்கள் கடத்திச் சென்று, பலாத்காரம் செய்துள்ளனர். ராய்ச்சூர் மாவட்டம், மான்வியில் வசிக்கும் 13 வயது மாணவி, எட்டாம் வகுப்பு படிக்கிறார். இவர் நேற்று காலை, பஸ் நிலையத்துக்கு சென்று, பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற மூன்று மர்மநபர்கள், பஸ் நிலையத்தில் மாணவி தனியாக நிற்பதை கவனித்தனர். அவரை மலைப்பகுதிக்கு இழுத்துச் சென்று, கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பினர். சிறுமி வீட்டுக்கு சென்று, தன் தாயிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக மான்வி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, பைக் நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ