உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஒடுக்கத்துார் மடத்தில் பரதநாட்டியம் ஆடி அசத்திய மாணவியர்

 ஒடுக்கத்துார் மடத்தில் பரதநாட்டியம் ஆடி அசத்திய மாணவியர்

ஹலசூரு: ஹலசூரு ஸ்ரீசோமேஸ்வரர் கோவில் பாதயாத்திரை குழு சார்பில், 'முருகர் வருவார் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. ஹலசூரு ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில் பாதயாத்திரை குழு சார்பில், 'முருகர் வருவார்' என்ற ஆன்மிக நிகழ்ச்சி, ஹலசூரு திருவள்ளுவர் சிலை அருகேயுள்ள, மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடத்தில் நடந்தது. இதில், புகழ்பெற்ற ஜோதிடரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் ஆன்மிக வழிகாட்டியுமான ஸ்ரீ ஜே.எஸ்.கே.கோபி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், 'நாட்டிய மயூரி கிளாசிக்கல் டான்ஸ் இன்ஸ்டிட்யூட் அன்ட் டிரஸ்ட்' நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குனருமான ஸ்ரீ லட்சுமி ரங்கநாத்தின், மாணவியரது பரதநாட்டியம் இடம் பெற்றது. வள்ளி - தெய்வானை மற்றும் முருகப்பெருமானின் லீலைகளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய, 7 முதல் 14 வயது வரையுள்ள ஸ்ரீ சம்யுக்தா, ஷீதல், ஈஷா இலக்கியா, வைஷ்ணவி, பிரியங்கா, ஷார்வி ஷெட்டி, மேனகா, லிப்பி, கனிஷா, தன்யா ஸ்ரீ, ஜீவிகா, மோக்ஷிதா மற்றும் பாவனா போன்ற மாணவியரின் அர்ப்பணிப்பு, துல்லியம், அழகிய அசைவுகளுடன் நடனம் ஆடி, பார்வையாளர்களை கவர்ந்தனர். நிகழ்ச்சியில் அனைத்து கலைஞர்களுக்கும் வேல் வழங்கிய கோபி, மாணவியரின் குரு, ஸ்ரீ லட்சுமி ரங்கநாத்தை பாராட்டினார். நிகழ்ச்சியின் முடிவில், பக்தர்கள் தங்களது வாழ்க்கை பிரச்னைகள், மனவேதனைகளை கோபியிடம் பகிர்ந்து கொண்டு, தீர்வுகள், பரிகார வழிமுறைகளை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை