உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பள்ளியில் தலைமை ஆசிரியரின் குடும்ப சண்டை பாடம் படிக்க முடியாமல் மாணவர்கள் அவதி

 பள்ளியில் தலைமை ஆசிரியரின் குடும்ப சண்டை பாடம் படிக்க முடியாமல் மாணவர்கள் அவதி

கொப்பால்: கொப்பால் மாவட்டம் கோமலாபுரா கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சித்தேஷ் ஷெட்டர், 45, என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்தும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னம்மா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருடன் வசித்தார். தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், நான்கைந்து மாதங்களாக, முதல் மனைவியுடன் சித்தேஷ் ஷெட்டர், வசிக்க துவங்கியதாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த 2வது மனைவி சென்னம்மா, தினமும் பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்து தகராறு செய்கிறார்; கூச்சல் போடுகிறார். நேற்று மதியமும் பள்ளிக்கு வந்து, கணவருடன் வாக்குவாதம் செய்தார். தலைமை ஆசிரியரின் குடும்ப சண்டையால், மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதைக்கண்டு கிராமத்தினரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது, பள்ளியா அல்லது சண்டை போடும் இடமா என, கேள்வி எழுப்புகின்றனர். கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு, தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை