கண் திருஷ்டி கழிக்க சன்னி லியோன் படம்
யாத்கிர்: தன் வயல் மீது கண் திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக, வயலில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் படத்தை விவசாயி வைத்துள்ளார். வயலில் விளையும் பயிர்கள் மீது கண் திருஷ்டி பட்டுவிடக்கூடாது என விவசாயிகள், திருஷ்டி பொம்மை வைப்பர். அப்படி இருக்கையில், இதற்கு நேர்மாறாக ஒரு சம்பவம், யாத்கிர் மாவட்டத்தில் நடந்துள்ளது. யாத்கிர் முதனுார் கிராமத்தை சேர்ந்த விவசாயி, தன் வயலில் பருத்தி விளைவித்தார்; அறுவடைக்கு தயாராக உள்ளது. இதை பார்த்து யாரும் கண் வைத்து விடக்கூடாது என்பதற்காக, அவர் தன் வயலில் கண் திருஷ்டி பொம்மை வைப்பதற்கு பதிலாக பா லிவுட் நடிகையும், கவர்ச்சி நடிகையுமான சன்னி லியோன் படத்தை மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளார். இதை அப்பகுதியினர் தங்கள் மொபைல் போன்களில் படம் பிடித்து இணையத்தில் பதிவே ற்றி 'கேலி' செய்து வருகின்றனர்.