உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுகாதாரத்துறை அமைச்சர் ரவுடிக்கு ஆதரவு

சுகாதாரத்துறை அமைச்சர் ரவுடிக்கு ஆதரவு

மங்களூரு: “முன்னாள் ரவுடி அப்படியே இருக்க வேண்டுமா; அவர்கள் சமூகத்தில் மேலே வரக்கூடாதா?” என, குக்கே சுப்ரமண்யா கோவிலின் நிர்வாக வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் ரவுடி ஹரிஷ் இஞ்சாடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கருத்து தெரிவித்துள்ளார்.மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:குக்கே சுப்ரமண்யா கோவிலின் நிர்வாக வாரிய தலைவராக முன்னாள் ரவுடி ஹரிஷ் இஞ்சாடி நியமிக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இந்த விஷயத்தில் நான் எதுவும் செய்யப்போவதுமில்லை.அவர் கோவில் நிர்வாகத்தின் உறுப்பினராக இருந்தார். தற்போது, வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுகாஸ் ஷெட்டி கொலை செய்யப்படும்போதும் ரவுடியாகவே இருந்தவர்.ஆனால், குக்கே சுப்ரமண்யா கோவிலின் நிர்வாக வாரிய தலைவராக முன்னாள் ரவுடி ஹரிஷ் இஞ்சாடியோ முன்னாள் ரவுடியே. இதனால், இருவரையும் தொடர்புபடுத்தக்கூடாது.கடந்த காலங்களில் ரவுடியாக இருந்தவர்கள், வாழ்நாள் முழுதும் ரவுடியாகவே இருக்க வேண்டுமா? அவர்கள், ரவுடித்தனத்தை விட்டுவிட்டு, வேலைகள் செய்து சமூகத்தில் மேலே வர வேண்டாமா? முன்னாள் ரவுடிகளையும் அப்படியே பார்ப்பது தவறு.அனைத்து வழக்குகளையும் பா.ஜ., - என்.ஐ.ஏ., - சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறுகிறது. இந்த விஷயத்தில் பா.ஜ., அரசியல் செய்கிறது.சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை மாநில போலீசாரே விசாரிப்பர். போலீஸ் துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. பா.ஜ., - எம்.பி.,க்கள் ஒரு நாளும் போலீசாரை பாராட்டியது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை