நாளை மாலை நடக்கிறது சூர்யகிரண் விமான சாகசம்
ப ன்னி மண்டபத்தில் நாளை, இந்திய விமானப்படையின் 'சூர்யகிரண் விமான சாகசம்' கண்காட்சி நடக்க உள்ளது. தசராவை ஒட்டி, இந்திய விமானப்படையின் 'சாரங்க்' குழுவினரின் ஹெலிகாப்டர் சாகச கண்கா ட்சி ஒத்திகை இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. தமிழகத்தின், கோவையில் முகாமிட்டு உள்ள இக்குழுவினர், இரண்டு நாட்களும் செய்த ஒத்திகையே, பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது. ஹெலிகாப்டரின் ஒவ்வொரு சாகசத்தையும் பொது மக்கள் கை கட்டி ஆரவாரம் செய்தனர். மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர்கள் சாகசம் 25 நிமிடங்கள் நீடித்தது. எச்.ஏ.எல்., எனும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனம் தயாரித்த இலகு ரக ஹெலிகாப்டரான துருவ் ஹெலிகாப்டரை, 17 பேர் கொண்ட 'சாரங்க்' குழுவினர் ஓட்டினர். இக்குழுவினர் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பல சாகசங்கள் செய்துள்ளனர். நாளை நடக்கும் விமான சாகச கண்காட்சியில், இந்திய விமானப்படையின் 'சூர்யகிரண் விமான குழுவினர்' தங்கள் சாகசத்தை வெளிப்படுத்த உள்ளனர். நாளை மாலை 4:00 மணிக்கு இந்த சாகசம் நடக்க உள்ளது. இக்குழுவினர், இதற்கு முன் 2023ல் சாகசம் செய்து காண்பித்தனர். அதுபோன்று இம்முறையும் குரூப் கேப்டன் அஜய் தசரதி தலைமையில் சாகசம் நிகழ்த்தப்பட உள்ளது. இக்கண்காட்சியை காண, டிக்கெட் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று இக்குழுவினரின் ஒத்திகை நடத்தப்படுகிறது. சில பாதுகாப்பு காரணங்களுக்காக, பன்னி மண்டபத்தில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.