உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / லஞ்சம் வாங்கி சிக்கிய தாசில்தார்

லஞ்சம் வாங்கி சிக்கிய தாசில்தார்

பல்லாரி: பணிகள் குறித்த அறிக்கை அளிக்க, ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய சிரகுப்பா தாசில்தார், லோக் ஆயுக்தாவிடம் சிக்கினார்.பல்லாரி மாவட்டம், சிரகுப்பா தாலுகாவில் சமூக நலத்துறை சார்பில், ஒப்பந்ததாரர் மஹந்தேஷ் பணிகளின் பொறுப்பை ஏற்றிருந்தார். அந்த இடத்தின் ஆய்வறிக்கை அளிக்கும்படி, தாலுகா நிர்வாகத்திடம் கோரினார். இதற்காக 3.5 லட்சம் ரூபாய் லஞ்சம் தரும்படி, சிரகுப்பா தாசில்தார் விஸ்வநாத் கேட்டார்.இதுகுறித்து, லோக் ஆயுக்தாவிடம் ஒப்பந்ததாரர் புகார் செய்தார். தாசில்தார் விஸ்வநாத், நேற்று காலையில் தன் வீட்டில், முதல்கட்டமாக 1.75 லட்சம் ரூபாய் வாங்கியபோது, லோக் ஆயுக்தா போலீசார், தாசில்தாரை கையும், களவுமாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை