உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தாசில்தார், ஊழியர்கள் விடுமுறையிலும் பணி

 தாசில்தார், ஊழியர்கள் விடுமுறையிலும் பணி

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளி தாலுகா அலுவலக ஊழியர்கள், கடந்த சில நாட்களாக எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர். எஸ்.ஐ.ஆர்., பணி துவங்கிய நாளில் இருந்து, அன்றாட பணிக்கு அலுவலகம் வர முடியவில்லை. இதனால் கோப்புகள் தேங்கின. பொது மக்கள் பாதிப்படைந்தனர். இவர்களின் நலனுக்காக, பாக்கி பணிகளை முடிக்க, தாசில்தார் மகேஷ் கஸ்தே முடிவு செய்தார். விடுமுறை நாளான நேற்று, அலுவலகம் வந்து பணியாற்றும்படி, ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு எந்த ஊழியரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், பணியாற்ற சம்மதித்தனர். தாசில்தார் மகேஷ் கஸ்தே, காலை 10:00 மணிக்கே அலுவலகம் வந்து, பணிகளை துவக்கினார். துணை தாசில்தார் உட்பட, 30 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அலுவலகம் வந்து, கோப்புகளை பார்வையிட்டு, அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினர். ஞாயிற்றுகிழமை என்பதால், பொது மக்கள் யாரும் அலுவலகம் வரவில்லை. எனவே எந்த இடையூறும் இன்றி, எட்டு மணி நேரம் பணியாற்றி, பாக்கி பணிகளை முடித்தனர். அரசு அலுவலகங்களில், சிறு, சிறு காரணங்களை கூறி கோப்புகளை மாதக்கணக்கில் பாக்கி வைத்து கொள்ளும் ஊழியர்களுக்கு இடையே, விடுமுறை தினம் என்றாலும், பணிக்கு வந்து கோப்புகளை கவனித்து முடித்த, ஹூப்பள்ளி தாசில்தார் மற்றும் ஊழியர்கள், மாநிலத்தின் மற்ற அரசு அலுவலகங்களுக்கு முன் மாதிரியாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar Venkadesan
செப் 28, 2026 17:16

நல்லதை பாராட்டுவோம் வரவேற்போம்


RajendraK
செப் 28, 2026 14:09

வேலை நாட்களில் இவர்கள் மக்களுக்காக நேர்மையாக வேலை செய்தாலே போதும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை