உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

இரவில் சூரியனை தேடுவதா?

மை னிங்கை மூட போதிய ஆதாரங்களை கோர்ட்டுக்கு சமர்ப்பித்த ஆபீசரே, தொழிலாளருக்கு ஆதரவாக அதே கோர்ட்டுக்கு போயிருக்காரு. இப்போ தண்ணீருக்குள் மீன் அழுகிறதாம். இவரை கோர்ட்டு படியிலேயே தாக்கின நினைவை அவர் மறந்துட்டாரோ. மைனிங் இருந்தால் தானே அந்த ஆபீசருக்கும் மதிப்பு என்பது அப்போ ஏன் புரிஞ்சிக்கல? பலவிதமான சிபாரிசுகளை தெரிவித்து, மைன்சை நடத்தச் சொல்லி 'உச்ச' கோர்ட்டு முடிவு வந்து, 20 வருஷம் தாண்டியும், அந்த உத்தரவை இன்னும் கூட அரசு அமல்படுத்தல. மறுபடியும் மைன்சை நடத்த, முயற்சி செய்வதாக, இப்போது செங்கோட்டைக்கு சென்று சிலர் புதிய கதா கலாட்சேபம் நடத்துறாங்க. இதை அரசு ஏத்துக்குதோ இல்லையோ, ஆனால், மைனிங் ஆளுங்க நம்பணுமே. பதுசா இரவில் சூரியனை தேடுறதா சொல்றாங்க. எப்போது விடிய போகுதோ?

தப்பா பேசலாமா?

கோ ல்டு சிட்டியில் சில ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ரூபாய் செலவுல, ஒரு மத நிறுவனம் மருத்துவமனையை ஏற்படுத்தினாங்க. ஆனால் அங்கு எதிர்பார்த்தபடி சிகிச்சை பெற நோயாளிகள காணல. இதனால், மாநில தலைநகரில் உள்ள அந்த மத குரு, கோல்டு சிட்டி என்றாலே நற...நற...ன்னு பல்ல கடிக்கிறாராம். அங்குள்ள ஜனங்களுக்கு ஏமாத்துக்காரங்க தான் தேவைப்படுறாங்களோன்னு சொல்றாராம். ஆனால், அவங்க உருவாக்கின மருத்துவமனையை 400 வீடுகள் இருக்கிற இடத்தில 300 வீடுகளை சேர்ந்தவங்க மீது காக்கி ஸ்டேஷனில் கிரிமினல் உட்பட பல வழக்குகள் உள்ளன. இந்த இடத்தில் மருத்துவமனை ஏற்படுத்தினால் யாருங்க அந்த இடத்தை தேடிப்போய் சிகிச்சை பெற முடியும்? அந்த மருத்துவமனை இருக்கும் இடத்தோட பேர கேட்டாலே 'அலர்ஜி' ஏற்படுவதா ஊரே பேசறப்போ, அந்த குருவுக்கு தெரியாதோ? அந்த இடத்தை தவிர்த்து வேற இடமா கிடைக்கல. இவங்களுக்கு ரா.பேட்டையில் இருக்கிற இடத்தில் ஏன் மருத்துவமனையை அமைக்கல? நெருப்பில் கையை வைத்து சும்மா நந்தலாலா பாடலாமா? முதலை கண்ணீர் ஏன் வடிக்கணும்? யாரும் சரியில்லன்னு, கோல்டு சிட்டி மக்கள் மீது எதுக்கு அந்த குரு தப்புக்கணக்கு போடணும்?

புதிய சம்பல் பள்ளத்தாக்கு?

கோ ல்டு சிட்டியில் இருந்து 25 கி.மீ., தொலைவிலும், அண்டை மாநிலமான 'ஆ' பிரதேசத்தின் ஒரு கி.மீ., துாரத்திலும் விவசாய விளைபொருள் விற்பனைக் கூடம் கோல்டு சிட்டி தொகுதிக்காரரு ஏற்படுத்தி வராரு. இது இவங்க தொகுதிக்கும், மாநிலத்துக்கும் எந்த வகையில் பிரயோஜனப்படுமோ? யாருக்கு பயன்படுதோ; பயன்படாதோ. ஆனால் கிரானைட் உள்ள இடத்தை தேர்வு செய்து பல 'சி' கிரானைட்டை வெட்டி எடுக்குறாங்களே, இங்கு பல 'சி' கொள்ளை போகுமாம். மாநில கனிமத்துறையின் கண்ணை மூட வெச்சி, துாங்க செய்திட்டாங்களாம். அங்கு தினமும் பண மழை தானாம். இதை கேள்வி கேட்க வேண்டிய எதிர்க்கட்சிகளும் விலை போயிட்டாங்களோன்னு பேசிக்கிறாங்க. பிற மாநிலங்களுக்கு எத்தனை லாரி கிரானைட் லோடு சென்றதன் கணக்கு ஏதாச்சும் யாருக்காவது தெரியுமா? இதுவும் ஒரு 'சம்பல் பள்ளதாக்கு' சம்பவமா?

தொழிற்பேட்டை எப்ப வரும்?

மா நில அசெம்பிளி பட்ஜெட்டில் பெருமை பேச, தொழிற்பூங்கா அமைக்கப் போவதாக அறிவிச்சாங்க. ப.பேட்டை தொகுதியை ஒட்டியபடி காலியாக உள்ள, 1,000 ஏக்கர் நிலம் மீது பார்வை செலுத்தினாங்க. அவசர அவசரமாக தொழிற்பேட்டை அமையும் இடமென பெயர் பலகைகளை வெச்சிருக்காங்க. ஆனால், தொழிற்பேட்டை அமைவதற்கான ஒரு சதவீத வேலையும் முளைத்ததாக தெரியல. எத்தனை கம்பெனிகள் வரும்? என்ன மாதிரி பேக்டரிகள், உள்நாட்டு, வெளிநாட்டு கம்பெனிகள் எவை? எவை எப்போது உள்கட்டமைப்பு பணிகளை துவங்கும்? இவையெல்லாம் ஓராண்டாக எழுப்பப்படும் கேள்விகள். மாநில கேபிடல் சிட்டியில் இருந்து, 100 கி.மீ., துாரத்தில் புதிய தொழில் நகரம் உதயமாகப் போவதாக மேடைக்கு மேடை பேசினால் மட்டும் போதுமா? ஆக்கப்பூர்வமான வேலைகள் எப்போது ஆரம்பமாகுமோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி