உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயல் நகராட்சி குப்பைக்கு எதிர்ப்பு

தங்கவயல் நகராட்சி குப்பைக்கு எதிர்ப்பு

தங்கவயல்: தங்கவயல் நகராட்சியின் குப்பையை பங்கார்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட உலகமதி என்ற கிராமத்தில் கொட்டுவதாக பரவிய தகவலை, நகராட்சி ஆணையர் பவன் குமார் மறுத்துள்ளார்.தங்கவயல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் 50 டன்னுக்கும் அதிகமான குப்பை சேருகிறது. இது, ராபர்ட்சன்பேட்டை அருகே உள்ள பாரண்டஹள்ளியில் அமைந்துள்ள கிடங்கில் கொட்டப்படுகிறது.இது போதுமான இடமாக இல்லை. குப்பை கொட்டுவதற்கு மேலும் ஒரு இடத்தை நகராட்சி நிர்வாகம் தேடி வருவதாக தகவல் வெளியானது.இதற்கிடையில் பங்கார்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட உலகமதி என்ற கிராமத்தில் தங்கவயல் நகராட்சி குப்பை கொட்டப்போவதாக தகவல் பரவியது. இதற்கு உலகமதி கிராம மக்கள் அதிருப்தியை வெளிபடுத்தி உள்ளனர்.இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமியிடம் கிராம மக்கள் புகார் செய்துள்ளனர். அதேபோல தங்கவயல் நகராட்சி ஆணையர் பவன் குமார் இடத்திலும் புகார் செய்துள்ளனர்.இதுகுறித்து நகராட்சி ஆணையர் பவன் குமார் கூறுகையில், “உலகமதி கிராமத்தில் தங்கவயல் நகராட்சிக்கு சொந்தமான குப்பை அகற்றும் வாகனங்கள் நிறுத்த 'ஷெட்' அமைக்கப்படுகிறது. குப்பை கிடங்கு அமைக்கவில்லை,” என்றார்.சுகாதாரம் முக்கியம்!கிராம மக்களின் சுகாதாரம் மிக முக்கியம். குப்பையை கொண்டு வந்து இங்கு கொட்டுவதால் பலரின் உடல் நலம் பாதிப்பு ஏற்படும். எனவே குப்பை கொட்ட அனுமதிக்கக் கூடாது என்று பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமியிடம் புகார் செய்துள்ளோம்.-நந்தினி,உறுப்பினர்,உலகமதி கிராம பஞ்சாயத்து


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை