உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தங்கவயல் போலீஸ் விளையாட்டு விழா

 தங்கவயல் போலீஸ் விளையாட்டு விழா

தங்கவயல்: தங்கவயல் போலீஸ் மாவட்ட விளையாட்டு விழா, ரிசர்வ் போலீஸ் படை அணிவகுப்பு மைதானத்தில் நேற்று துவங்கியது. புறாக்களை பறக்க விட்டு விழாவை கலெக்டர் எம்.ஆர்.ரவி துவக்கி வைத்தார். விழாவில் எஸ்.பி., ஷிவாம்ஷு ராஜ்புத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் கலெக்டர் பேசியது: போலீஸ் பணி என்பது மற்ற பணிகள் போல் இல்லை. குடும்பத்தை மறந்து, குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல், கடமையை உயிராக நேசிக்கிற பணியாக உள்ளது. போலீசார் மனசாட்சி போல் செயல்பட வேண்டும். கை, கால்கள் பாதித்தால் கூட சரி செய்து விடலாம். ஆனால், மனது பாதித்தால் சமாதானப் படுத்த முடியாது. இத்தகைய கடமையுள்ள போலீசாருக்கு பொழுதுபோக்கு தேவை. அதன்படி தான் மாநிலம் முழுதுமே ஆண்டுதோறும் போலீஸ் விளையாட்டு விழா கொண்டாடப்படுகிறது. இதில் போலீசார் குடும்பத்தினர் பங்கேற்பது மகிழ்ச்சி தருகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, தோல்விகளை சமமாக ஏற்க வேண்டும். உற்சாகமாக விளையாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, போலீசாரின் அணிவகுப்பு நடந்தது. 100 மீட்டர் துாரம் ஆண், பெண் தனித் தனியாக ஓட்டப்பந்தயம் நடந்தது. ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டமும் நடந்தது. போலீசாருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நடந்த கிரிக்கெட் போட்டியில், வின்னராக போலீஸ் அணி, ரன்னராக பத்திரிகையாளர் அணி வென்றனர். இன்றும், நாளையும் விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. தங்கவயல் மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்பது போலீஸ் நிலையங்களை சேர்ந்தோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்