உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தங்கவயல் ரவுடிகள் இல்லா நகரமாகும்

 தங்கவயல் ரவுடிகள் இல்லா நகரமாகும்

தங்கவயல்: தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை அம்பேத்கர் நகர், சஞ்சய் காந்தி நகர் பகுதிகளில், ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளுக்கு, போலீஸ் எஸ்.பி., ஷிவான்ஷு, மற்ற போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் சென்று, 'ரவுடி தொழிலை விட்டு, குடும்பத்துடன் கவுரவமாக வாழ வேண்டும். இல்லையேல், மாவட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்' என்று ரவுடிகளை எச்சரித்தார். 'குடும்பத்துடன், பெற்றோர், மனைவி, பிள்ளைகளுடன் மன நிம்மதியுடன் வாழ உழைத்து சம்பாதியுங்கள். குடும்பத்தை காப்பாற்றுங்கள்.தங்கவயலில் ரவுடிகள் நடமாட்டம் இருக்க விட மாட்டோம். தங்கவயல் ரவுடிகள் இல்லா நகரமாகும்' என்றும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ