உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காங்., அரசின் வீழ்ச்சி உறுதி அடித்து சொல்லும் எத்னால்

காங்., அரசின் வீழ்ச்சி உறுதி அடித்து சொல்லும் எத்னால்

விஜயபுரா: “வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கால், காங்கிரஸ் அரசின் வீழ்ச்சி உறுதியாகி உள்ளது,” என, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறினார்.விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டை, எஸ்.ஐ.டி., விசாரணை மூலம் ஒன்றும் இல்லாமல் ஆக்க அரசு முயற்சி செய்தது. நான், ரமேஷ் ஜார்கிஹோளி, அரவிந்த் லிம்பாவளி, குமார் பங்காரப்பா ஆகியோர், சி.பி.ஐ., விசாரணை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சட்ட போராட்டம் நடத்தினோம். இதில் தற்போது வெற்றி பெற்றுள்ளோம்.எங்கள் போராட்டத்தை நிறுத்த எடியூரப்பாவும், விஜயேந்திராவும் முயற்சி செய்தனர். நாங்கள் உறுதியாக இருந்தோம். வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையா உட்பட பலர் ஈடுபட்டு உள்ளனர். இந்த வழக்கால் அரசின் வீழ்ச்சி உறுதியாகி உள்ளது.எங்கள் அணியில் உள்ள சில தலைவர்களுக்கு, கட்சி பொறுப்பு வழங்க பா.ஜ., மேலிடம் ஆலோசித்து வருகிறது. அப்படி நடந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். பா.ஜ., உயர்மட்ட குழுவில் நானும் முன்பு இருந்தேன். சட்டசபை தேர்தலில் சீட் மறுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசினேன்.கட்சிக்காக உழைப்பவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை நேருவால் கூட தடை செய்ய முடியவில்லை. அமைச்சர் பிரியங்க் கார்கேவால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தொடக்கூட முடியாது. தலித் சமூகத்தை சேர்ந்த அவர், எத்தனை தலித்துகளுக்கு நல்லது செய்துள்ளார் என்று முதலில் கூறட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !