உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தாலியை அடகு வைத்து லஞ்சம் கொடுத்த நபர்

தாலியை அடகு வைத்து லஞ்சம் கொடுத்த நபர்

ஹாவேரி:அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க, தன் மனைவியின் தாலியை ஒருவர் அடகு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹாவேரி நகரின் பெலவகி கிராமத்தில் வசிப்பவர் மஹாந்தேஷ் படிகேர். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இவரது வீடு வெள்ள பாதிப்பில் சிக்கி, இடிந்து விழுந்தது. அரசின் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், வீடு கட்டிக் கொண்டால், அதற்கான தொகையை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டப்படி மஹாந்தேஷ் படிகேர், வீடு கட்டிக்கொண்டார்.பில்களை தாசில்தார் அலுவலகத்தில் தாக்கல் செய்து, வீடு கட்டிய தொகையை வழங்கும்படி கோரினார். ஆனால் தாசில்தார் அலுவலக ஊழியர் மதன் மோகன், '2-0,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், பில் தொகை கிடைக்கும்' என, கூறினார்.மஹாந்தேஷும் வேறு வழியின்றி, தன் மனைவியின் மாங்கல்யத்தை அடமானம் வைத்து, 20,000 ரூபாய் கொடுத்தார். லஞ்சம் கொடுத்தும் பில் தொகை கிடைக்கவில்லை. தாசில்தார் அலுவலகத்துக்கு அலையாய் அலைந்தும் பயன் இல்லை.இதற்கிடையே அலுவலக கேன்டீன் ஊழியரும், பில் தொகையை கிடைக்க செய்வதாக நம்ப வைத்து, 20,000 ரூபாய் பெற்றுள்ளார். பில் தொகை கிடைக்கவில்லை. மனம் நொந்த மஹாந்தேஷ், நேற்று காலை ஹாவேரி தாசில்தார் சரணம்மாவை சந்தித்து, புகார் அளித்தார்.இதுகுறித்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக, தாசில்தார் உறுதி அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ