மேலும் செய்திகள்
சாமுண்டி மலையில் மகர ரத உத்சவம்
07-Oct-2025
குடகு: காவிரி அன்னைக்கு நன்றிக் கடன் செலுத்தும், தீர்த்த உத்சவம் தலக்காவிரியில் நேற்று கோலாகலமாக நடந்தது. மைசூரு எம்.பி., யதுவீர் உட்பட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். கர்நாடகா, தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும், காவிரி ஆறு குடகு தலக்காவிரியில் உற்பத்தி ஆகிறது. ஆண்டிற்கு ஒரு முறை காவிரி தாய்க்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில், காவிரி தீர்த்த உத்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டிற்கான தீர்த்த உத்சவம் நேற்று நடந்தது. உத்சவத்தை தரிசிக்க நேற்று காலை முதலே, பாகமண்டலாவில் மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர், மங்களூரு, பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்தனர். சரியாக மதியம் 1:44 மணிக்கு தீர்த்த உத்சவம் துவங்கியது. காவிரி தாய் சிலை அமைந்துள்ள இடத்தில், தண்ணீர் பொங்கி எழுந்தது. பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். காவிரி தாய்க்கு ஜே என்று முழக்கம் எழுப்பினர். காவிரி தாய்க்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்த பின், தீர்த்த தண்ணீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. குடங்கள், பாத்திரங்களில் தீர்த்த தண்ணீரை பிடித்து, பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். மைசூரு எம்.பி., யதுவீர், எம்.எல்.ஏ.,க்கள் மந்தர் கவுடா, பொன்னண்ணா உட்பட அரசியல் தலைவர்களும், கன்னட நட்சத் திர ஜோடி புவன், ஹர்ஷிகா பூனச்சா ஆகியோரும் கலந்து கொண்டனர். குடகு மக்கள் கொடவா சமூக உடை அணிந்து வந்தனர்.
07-Oct-2025