உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உங்களுக்கு எதிராக சாட்சிகள் உள்ளன; பிரஜ்வல் வழக்கில் நீதிபதி கருத்து

உங்களுக்கு எதிராக சாட்சிகள் உள்ளன; பிரஜ்வல் வழக்கில் நீதிபதி கருத்து

பெங்களூரு; 'உங்களுக்கு எதிராக நம்பத்தகுந்த சாட்சிகள் உள்ளன' என, முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா ஜாமின் மனு மீதான விசாரணையின்போது நீதிபதி கூறினார்.ஹாசன் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா. நான்கு பாலியல் வழக்குகளில் கடந்த ஆண்டு மே 31ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது வரை சிறையில் உள்ளார்.தன் மீது பதிவான முதல் பலாத்கார வழக்கில் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து முறையிட்டும் ஜாமின் கிடைக்கவில்லை.இதையடுத்து இரண்டாவது முறையாக மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் இந்த ஆண்டு பிப்ரவரியில் மனுத் தாக்கல் செய்தார். விசாரணை முடிந்த நிலையில், கடந்த 5ம் தேதி நீதிபதி சந்தோஷ் கஜனன பட், பிரஜ்வலுக்கு ஜாமின் வழங்க மறுத்தார்.'உங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கக போதிய ஆதாரம் உள்ளது' என, நீதிபதி கூறினார்.

சிறப்பு காரணம்

இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் பிரஜ்வல் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிபதி பிரதீப்சிங் யெரூர் நேற்று விசாரித்தார்.பிரஜ்வல் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரபுலிங்க நவதகி வாதிடுகையில், ''2021ம் ஆண்டு தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார்.''ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்து போலீசில் புகார் செய்துள்ளார். இதற்கு என்ன காரணம்? மனுதாரர் கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக சிறையில் உள்ளார். இதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்,'' என்றார்.அரசு தரப்வு வக்கீல் ஜெகதீஷ் வாதிடுகையில், ''மனுதாரரின் ஜாமின் மனு, உச்ச நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்டு உள்ளது.பலாத்கார வழக்கில் மற்ற குற்றஞ்சாட்டபட்டவர்கள் மீதான விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மனுதாரர் மீது நான்கு பாலியல் வழக்கு உள்ளது,'' என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரதீப்சிங் யெரூர் வாய்மொழியாக கூறுகையில், ''மனுதாரருக்கு எதிராக நம்பத்தகுந்த சாட்சி உள்ளது. மற்ற குற்றஞ்சாட்டபட்டவர்கள் மீதான விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், ஜாமின் கோர முடியாது.''சிறப்பு காரணம் இல்லாவிட்டால், எப்படி ஜாமின் வழங்க முடியும்? ஆனாலும் மனுதாரர் தரப்பு வாதங்கள் கேட்கப்படும்,'' என்றார்.மனு மீதான அடுத்த விசாரணையை 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ