உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடக பா.ஜ., தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வாய்ப்பில்லை

கர்நாடக பா.ஜ., தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வாய்ப்பில்லை

தார்வாட்: ''கர்நாடக பா.ஜ., புதிய தலைவர் தேர்வு, தேர்தல் முறையில் நடக்காது,'' என்று, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி புதிய தகவல் கூறி உள்ளார். தார்வாடில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடக பா.ஜ., புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் நடைமுறையை, கட்சி மேலிடம் துவங்கி விட்டது. விஜயேந்திரா, சோமண்ணா உட்பட யாராக இருந்தாலும், புதிய தலைவர் யார் என்பதை, கட்சி மேலிடம் தீர்மானிக்கும். தலைவரை தேர்ந்து எடுக்க தேர்தல் நடக்காது. கட்சியில் இருப்போர் யாரும், நாங்கள் தான் அடுத்த தலைவர் என்றும் கூறவில்லை. அனைவருக்கும் கட்சி மேலிடத்தின் மீது நம்பிக்கை உள்ளது. தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சென்று கட்சியை பலப்படுத்துவோம். லோக்சபா தேர்தலில் முறைகேடு நடந்ததாக, காங்கிரஸ் ராகுல் போராட்டம் நடத்த இருப்பது வேடிக்கையாக உள்ளது. பாலியல் வழக்கில் பிரஜ்வலுக்கு தண்டனை கிடைத்து உள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கு நாம் தலைவணங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம் கர்நாடக பா.ஜ., தலைவரை மேலிடமே நியமிக்கும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ