உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நடப்பாண்டு மலர் கண்காட்சி தியாகிகளுக்கு சமர்ப்பணம்

நடப்பாண்டு மலர் கண்காட்சி தியாகிகளுக்கு சமர்ப்பணம்

பெங்களூரு: சுதந்திர தினத்தை முன்னிட்டு, லால்பாக் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி, இம்முறை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினங்களில், தோட்டக்கலைத் துறை சார்பில், பெங்களூரின் லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்துவது வழக்கம். இம்முறை ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. இக்கண்காட்சி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற கித்துார் ராணி சென்னம்மா, சங்கொல்லி ராயண்ணா வாழ்க்கை வரலாற்றை, மலர் அலங்கரிப்பில் வெளிப்படுத்துவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை