பைக் மீது லாரி மோதி மூன்று பேர் பலி
துமகூரு: கன்டெய்னர் லாரி மோதியதில், பைக்கில் வந்த மூவர் உயிரிழந்தனர்.துமகூரு புறநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48ல் அமைந்துள்ளது நந்திஹள்ளி. இங்கு உள்ள பெட்ரோல் பங்கில், நேற்று காலை பைக்கில் வந்த மூவர், பெட்ரோல் நிரப்பிவிட்டு, நெடுஞ்சாலையை நோக்கிச் சென்றனர்.அப்போது, அவ்வழியே வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் இறந்தவர்கள் ராஜேஷ், 25, தனஞ்சயா, 27, தனுஷ், 23, என்பது தெரிய வந்தது. இவர்கள் தபாஸ்பேட்டையில் உள்ள எம்.இ., சூரிய சக்தி நிறுவனத்தில், காவலாளிகளாக வேலை செய்து வந்துள்ளனர். இரவுப்பணியை முடித்துவிட்டு, நேற்று அதிகாலை துமகூருக்கு சென்று கொண்டிருந்தனர்.மாவட்ட எஸ்.பி., அஷோக் வெங்கட், கூடுதல் எஸ்.பி., கோபால், டி.எஸ்.பி., சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.