விபத்தில் தம்பதி உட்பட மூவர் பலி
மைசூரு: பைக் மீது லாரி மோதியதில் தம்பதி உட்பட, மூவர் உயிரிழந்தனர்.மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின், ஹஞ்சிபுரா கிராமத்தில் வசித்தவர் சிக்கசாமி, 45. இவரது மனைவி ரூபா, 38. சிக்கசாமி நேற்று மதியம் தன் மனைவி மற்றும் கனேனுார் கிராமத்தை சேர்ந்த சென்னமல்லம்மா, 55, ஆகியோருடன் பைக்கில் நஞ்சனகூடுக்கு சென்று கொண்டிருந்தார்.நஞ்சன்கூடின் சங்கமா மற்றும் ஹுல்லஹள்ளி பிரதான சாலையில் சென்றபோது, வேகமாக வந்த லாரி மோதியது. பைக்கில் இருந்த மூவரும் கீழே விழுந்தனர்.அவர்கள் மீது லாரி ஏறியதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவலறிந்து அங்கு வந்த ஹுல்லஹள்ளி போலீசார், உடல்களை மீட்டனர்.விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை, போலீசார் கைது செய்தனர். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.உயர் போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.