உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி., உட்பட மூவர் சஸ்பெண்ட்

 லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி., உட்பட மூவர் சஸ்பெண்ட்

உடுப்பி: உடுப்பியின், கார்கலா டெபுடி எஸ்.பி., விஜய் பிரசாத் அலுவலகத்தில், குற்றவாளிகளிடம் லஞ்சம் கேட்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, சில நாட்களுக்கு முன், வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, பொது மக்கள் வலியுறுத்தினர். இதை கவனித்த எஸ்.பி., ஹரிராம் சங்கர், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணை முடியும் வரை, லஞ்ச குற்றச்சாட்டை எதிர்கொண்ட டெபுடி எஸ்.பி., விஜய் பிரசாத், இன்ஸ்பெக்டர் சந்தீப், டெபுடி எஸ்.பி., அலுவலக ஊழியர் சிவானந்தா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, நேற்று உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !