உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அரசு அலுவலகத்தில் பார்ட்டி கொண்டாடிய மூவர் சஸ்பெண்ட்

 அரசு அலுவலகத்தில் பார்ட்டி கொண்டாடிய மூவர் சஸ்பெண்ட்

ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டத்தின், பஞ்சாயத்து ராஜ் இன்ஜினியரிங் துணைப்பிரிவு அலுவலகத்தில், சில நாட்களுக்கு முன், மதுபான பார்ட்டி நடந்தது. சிலர் இதில் பங்கேற்றிருந்தனர். இதை கவனித்த அப்பகுதியினர், தங்களின் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி, புகார் அளித்தனர். அரசு அலுவலகம், மக்களின் பணிக்காக செயல்பட வேண்டும். ஆனால் அங்கு அதிகாரிகள், விதிமீறலாக மதுபான பார்ட்டி நடத்தியது சரியல்ல. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர். இதை தீவிரமாக கருதிய அரசு, துறை ரீதியில் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் அலுவலகத்தில், மதுபான பார்ட்டி நடத்தியது உறுதியானது. அரசு அலுவலகத்தை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்திய ஏ.இ.இ., ஹனுமந்தப்பா ஆதவானி, அலுவலக ஏ குரூப் உதவியாளர், பாதுகாப்பு ஊழியர் ஹனுமந்தா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, கிராம மேம்பாட்டு துறை செயலர் சேத்தன் நேற்று முன் தினம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை