உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  லிப்ட் கதவு திறக்காமல் திண்டாடிய மூவர் மீட்பு

 லிப்ட் கதவு திறக்காமல் திண்டாடிய மூவர் மீட்பு

தட்சிண கன்னடா: தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா ரெட்டி, 60, ஆல்பர்ட், 61, ராமாராவ் யாதவ், 38, ஆகியோர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். நேற்று காலை ஊருக்கு செல்ல, அறையை காலி செய்து விட்டு, லிப்டில் ஏறினர். கீழே இறங்கும் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லிப்ட் பாதியில் நின்றது. கதவை திறக்க முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து, லிப்டில் உள்ள அவசர உதவி கருவி மூலம், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், ஒரு மணி நேரத்திற்கும் மே லோக போராடி, லிப்ட் கதவை திறந்து, மூவரையும் பத்திரமாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !