உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  புலிகள் நடமாட்டம் கிராம மக்கள் கிலி

 புலிகள் நடமாட்டம் கிராம மக்கள் கிலி

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகரில் புலிகள் நடமாட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால், கிராம மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். கர்நாடகாவில் மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில், புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். புலி தாக்கி கூலி தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறும். இந்நிலையில், சாம்ராஜ்நகரில் உள்ள குண்டலுபேட் தாலுகாவில், நஞ்சதேவன்புரா கிராமத்தில் உள்ள குமாரசாமி, 46, என்பவருக்கு சொந்தமான நிலத்தில், நேற்று முன்தினம் இரவு ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் ஐந்து புலிகள் நடமாடியுள்ளன. இது வயலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இந்த காட்சியை பார்த்த குமாரசாமி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறை அதிகாரிகள் புலிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புலி நடமாட்டம் குறித்த வீடியோ, 'வாட்ஸாப்'பில் பரவியது. இதனால், கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதற்கே அஞ்சி பயத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி