இன்று இனிதாக... (05.08.2026) பெங்களூரு
ஆன்மிகம் பரணி காவடி திருவிழா ஆடி கிருத்திகை பரணி காவடி திருவிழாவை ஒட்டி, விஸ்வரூபதரிசனம் - காலை சந்தி பூஜை - 8:00 மணி; சிறுகாலை சந்தி பூஜை - 9:00 மணி; உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி; தீபாராதனை - மாலை 5:00 மணி; இராக்கால பூஜை - இரவு 9:00 மணி; ஆராதனை - நள்ளிரவு 12:00 மணி. இடம்: ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில், பத்ரகிரி, சிக்கமகளூரு மாவட்டம். ஆடி கிருத்திகை 55ம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா பால் குடம் ஊர்வலம், குங்கும அர்ச்சனை,- காலை 11:00 மணி. இடம்: ஸ்ரீ முருகன் கோவில், பழைய ஓரியண்டல் வட்டம், கோரமண்டல். தங்கவயல். மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது விற்பனை, கண்காட்சி சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. அம்பேத்கர் சிலை திறப்பு தங்கவயல் நகராட்சி வளாகத்தில் பழுதடைந்த அம்பேத்கர் சிமென்ட் சிலையை மாற்றி, வெண்கல சிலையாக நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா,- காலை 11:00 மணி. இடம்: தங்கவயல் நகராட்சி வளாகம், ராபர்ட்சன்பேட்டை.