மேலும் செய்திகள்
இன்று இனிதாக… பெங்களூரு
19-Feb-2026
ஆன்மிகம் அதிருத்ரம் 2026 ஸ்ரீராமகிருஷ்ணா பஜனை சபா அறக்கட்டளை சார்பில் 'அதிருத்ரம் 2026' விழாவை ஒட்டி, புதுக்கோட்டை ஸ்ரீ நரசிம்ம பாகவதர் குழுவினரின் உஞ்சவிருத்தி - காலை 7:30 முதல் 9:00 மணி வரை; ஸ்ரீகாந்த் கவுண்தின்யா பாகவதர் குழுவினரின் பஜனை வடிவில் மீனாட்சி கல்யாணம் மற்றும் ஆஞ்சநேய தியானம் - 9:15 முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: சூர்யநாராயணா கல்யாண மண்டபம், தொம்மலுார், பெங்களூரு. ஆண்டு விழா, மஹா சிவராத்திரி பிரஜாபிடா பிரம்ம குமாரிகள் ஐஸ்வர்ய விஸ்வ வித்யாலயா 90 வது ஆண்டு விழா மற்றும் மஹா சிவராத்திரி நிறைவு நாள் விழா - இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: வித்யாலயா வளாகம், நான்காவது ஸ்டேஜ், விஜயநகர், மைசூரு. ஸ்ரீ புரந்தரதாசா, ஸ்ரீ தியாகராஜ ஆராதனை சுரபி கானகலா மந்திர் சார்பில் ஸ்ரீ புரந்தரதாசா, ஸ்ரீ தியாகராஜ ஆராதனை ஒட்டி, நகரின் அனைத்து இசை கலைஞர்களின் தியாகராஜ பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசை - காலை 8:30 மணி; வித்வான்கள் கவுரவிப்பு - 10:15 மணி; விஷ்ணுதேவ் நம்பூதிரியின் பாடல், பாஸ்கரின் வயலின், ஜெயசந்திர ராவின் மிருதங்கம், ராமானுஜத்தின் கடம், ஆரத்தி, பிரசாதம் வழங்கல் - 10:30 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன பார்வதி கல்யாண மண்டபம், வி.வி.மொஹல்லா, மைசூரு. லேசர் ஷோ அவது ாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது மைசூரு இலக்கிய திருவிழா மைசூரு இலக்கிய சங்கம் சார்பில் இலக்கிய திருவிழா - காலை 10:00 மணி. இடம்: மஹாராஜா கல்லுாரி நுாற்றாண்டு அரங்கம், மைசூரு. கைத்தறி கண்காட்சி இந்திய தஸ்த்கர் கைத்தறி மற்றும் கைவினை கண்காட்சி - காலை10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. ஸ்ரீசாந்தா சேவாலால் ஜெயந்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் கன்னடம், கலாசார துறை, மைசூரு மாநகராட்சி இணைந்து நடத்தும் ஸ்ரீசாந்தா சேவாலால் ஜெயந்தி - காலை 11:30 மணி. இடம்: மினி தியேட்டர், கலாமந்திர் வளாகம், மைசூரு. நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர். ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை கன்னடா, இந்தி ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சில்லா தி கார்டன் கபே, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். ஜாம் வித் பரத் சிஜே - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: நேடிவ் பார் அண்ட் இந்தியன் கிட்சன், 421 கியூ, ஸ்ரீகிருஷ்ணா டெம்பிள் சாலை, முதலாவது ஸ்டேஜ், இந்திரா நகர். தெலுங்கு ஜாமிங் - இரவு 7:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, மூன்றாவது தளம், 15வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். குட்லா எக்ஸ் கொடவா - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: வேப்பர் இந்திரா நகர், 773, 100 அடி சாலை, எச்.ஏ.எல்.,இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர். ஓபன் மைக் - இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: ஹட்டில் காபி கோ, 262, கெம்பே கவுடா சாலை, பக்ருதி லே - அவுட், பெங்களூரு. லேடீஸ் நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 8, இரண்டாவது தளம், அல்லய்டு கிராண்ட் பிளாசா, அசோக் நகர். காமெடி காமெடி நைட் - இரவு 7:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், இரண்டாவது தளம், பிரிகேட் சாலை, சாந்தாலா நகர். மிட்நைட் காமெடி - இரவு 11:00 மணி முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர் சர்ச் ஸ்டிரீட், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், சாந்தாலா நகர், அசோக் நகர். ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 9:30 முதல் 10:45 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, எஸ்.டி.,பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
19-Feb-2026