மேலும் செய்திகள்
இன்று இனிதாக
23-Jun-2026
ஆன்மிகம் கும்பாபிஷேகம் ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவை ஒட்டி, யாக சாலை பூஜை, ஹோமம், நாடி சந்தானம், ஸ்பர்ஷாஹூதி, பிரயாச்சித்தஹூதி, மஹா பூர்ணாஹூதி, மூர்த்தி சம்யோஜனம், கலசம் புறப்பாடு, விமானம், ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேகம், மூலஸ்தானங்கள் மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம் - காலை 9:45 முதல் 10:30 மணிக்குள்; அம்மனின் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் - மாலையில். இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், கிரங்கூர் போஸ்ட், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா. ஆண்டு விழா ஸ்ரீ சக்தி கணபதி கோவில் 43ம் ஆண்டு விழாவை ஒட்டி, லட்சுமி, குபே, சரஸ்வதி, தன்வந்த்ரி மூலமந்திர ஹோமம், மஹா மிருதுஞ்செய ஹோமம், சப்தசதி பாராயணம் - காலை 7:35 முதல் மதியம் 12:30 மணிக்குள்; சப்தசதி பாராயணம், சுக்த பாராயணம், மஹா மங்களாரத்தி - மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீ சக்தி கணபதி கோவில், நியூ திப்பசந்திரா, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், பெங்களூரு. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி - காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரவியல் பூங்கா, பெங்களூரு. யோகா வாழும் கலை அமைப்பு சார்பில் யோகா, தியானம், சுவாச பயிற்சி - காலை 6:00 முதல் 8:30 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: வாழும் கலை ஆசிரமம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு. தொடர்புக்கு: 94804 76825.
23-Jun-2026