மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (22.07.2026) பெங்களூரு
22-Jul-2026
ஆன்மிகம் ராதா கல்யாணம் பெங்களூரு கல்யாண்நகர் ஆஸ்திக சமாஜம் சார்பில் ராதா கல்யாண உத்சவத்தை ஒட்டி மகா கணபதி ஹோமம் - அதிகாலை 5:30 மணி; உஞ்சவிருத்தி, திவ்யநாமம், அனந்தநாராயணன் தலைமையில் பெங்களூரு ஸ்ரீ கோபாலகிருஷ்ண நாம பிரசார பஜனை மண்டலியின் பஜனை வடிவில் ஸ்ரீ ராதா மாதவ கல்யாண உத்சவம், பிரசாதம் வழங்கல் - காலை 8:00 மணி; வசந்த கேளிக்கை, சயனோத்சவம், ஆஞ்சநேய உத்சவம் - மாலை 4:30 மணி. ஆடி திருவிழா ஆடித்திருவிழாவை ஒட்டி, அன்ன தானம் - மதியம் 1:00 மணி. இடம்: ஸ்ரீ பெரிய பாளையாத்து அம்மன் கோவில், வீலர்ஸ் சாலை, காக்ஸ்டவுன். மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது திருவள்ளுவர் சிலை திறப்பு கூட்டம் விஸ்வ கவி திருவள்ளுவர் சங்கம் சார்பில் ஆக. 9 ம் தேதி, 17 ம் ஆண்டு திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஆலோசனை கூட்டம் - மதியம் 3:00 மணி. இடம்: திருவள்ளுவர் சிலை, என்.நீலகண்டன் சதுக்கம், ஹலசூரு. ஏசர் ரன் 2026 ஏசர் இந்தியா நிறுவனம் சார்பில் ஏசர் ரன் 2026ஐ அமைச்சர் காதர் துவக்கி வைப்பு - காலை 6:30 மணி. இடம்: ஸ்ரீகன்டீரவா விளையாட்டு மைதானம், பெங்களூரு. மனித சங்கிலி விழிப்புணர்வு பெங்களூரில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக லால்பாக் நடைபயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் பாரம்பரிய பெங்களூரை காப்பாற்றுவோம் மனித சங்கிலி விழிப்புணர்வு - காலை 7:30 மணி. இடம்: லால்பாக் ராக், பெங்களூரு. விற்பனை, கண்காட்சி சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.
22-Jul-2026