உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக 

ஆன்மிகம் பூணுால் பண்டிகை  கன்னட தேவாங்க சமூகத்தினரின் பூணுால் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீ விக்னேஸ்வரி பூஜை, புண்யாஹவசனம், குலகுரு தேவல மகரிஷி பூஜை, குலதேவதை ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி பூஜை, கணபதி ஹோமம், ஸ்ரீ சவுடேஸ்வரி மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி - காலை 9:00 மணி; ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு நைவேத்ய பூஜை, தேவாங்க சமூகத்தினரால் பூணுால் தாரணை - 10:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 11:45 மணி. இடம்: ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், லக்கசந்திரா. நடராஜர் அபிஷேகம்  ஸ்ரீ நடராஜருக்கு ஆவணி மாத அபிஷேகம் - மாலை 6:00 மணி; அலங்காரம், பூஜை, பிரசாதம் வழங்கல் - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர். லேசர் ஷோ  அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது விற்பனை, கண்காட்சி  சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. நாடக பயிற்சி முகாம்  கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76187 39343. கண்காட்சி  பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஓவியங்கள், சிலைகள்' கண்காட்சி - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிறுகளில் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு. தொடர்புக்கு ngma.gmail.comஎன்ற மின்னஞ்சலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இசை  கன்னடா ஜாமிங் - இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.  கரோக்கி லைவ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.  ஓணம் நைட் - இரவு 8:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: பட் பீ ரெஸ்டோ பார், 65, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.  ஓணம் பஷ் பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: பனாசியா லாஞ்சு அண்ட் ரெஸ்டோ பார், 35, இரண்டாவது தளம், மாரத்தஹள்ளி. காமெடி  வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.  மிட் நைட் காமெடி ஷோ - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ