உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம் கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பெங்களூரு ஒயிட்பீல்டு ஹரே கிருஷ்ணா பீல்டு இஸ்கான் கோவிலில், கிருஷ்ணருக்கு அபிஷேகம், ஆரத்தி, சப்பன் போகம், வெண்ணெய் மிஸ்ரி சேவை, புஷ்பாஞ்சலி சேவை, பல்லக்கு ஊர்வலம், ஜூலன் சேவை, கோ பூஜை, கோடி ஜப யாகம், கீதா பாராயணம், பிரபல கலைஞர்களின் நடனம், இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளின் சுலோக பாராயணம் - காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை. இடம்: ஹரே கிருஷ்ணா பீல்டு இஸ்கான் கோவில், ஒயிட்பீல்டு. சுதர்ஷன ஹோமம், மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் - காலை 9:30 மணி; உறியடி, ரத உற்சவம் - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீராமானுஜ வேணு கோபால கிருஷ்ணா கோவில், பழக்கார தெரு, காமராஜ் ரோடு, சிவாஜிநகர். விஷ்ணு சஹஸ்ரநாமம் ஷ்ரவணா மாத கடைசி சனிக்கிழமையை ஒட்டி, கல்யாண உத்சவம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், சுலோகங்கள், பாராயணம் - மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் - மாலை 6:45 மணி. இடம்: ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் கோவில், 100 அடி ரோடு, இந்திராநகர். தொடர்புக்கு: 94485 58116, 95381 48661. துாய ஆரோக்கிய அன்னை பெருவிழா துாய ஆரோக்கிய அன்னை பெருவிழாவை ஒட்டி, தமிழில் திருப்பலி - அதிகாலை 5:30, 8:00, 10:00, மதியம் 3:45, இரவு 7:30 மணி; ஆங்கிலத்தில் திருப்பலி - காலை 7:00, 11:00, மதியம் 3:00, இரவு 9:00 மணி; கன்னடத்தில் திருப்பலி - காலை 6:15, 9:00, மதியம் 12:00, மாலை 4:30, இரவு 8:15 மணி; கொங்கனியில் திருப்பலி - மதியம் 1:30 மணி; மலையாளத்தில் திருப்பலி - மதியம் 2:15 மணி. இடம்: துாய ஆரோக்கிய அன்னை தேவாலயம், சிவாஜி நகர். தங்கத்தாய் திருவிழா ஜெ பமாலை, நவநாள் ஜெபம், திருப்பலி- - காலை 11:00 மணி; மாலை 5:30 மணி. இடம்: தங்கத்தாய் திருத்தலம், உரிகம், தங்கவயல். லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது விற்பனை, கண்காட்சி சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. கண்காட்சி பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஓவியங்கள், சிலைகள்' கண்காட்சி - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல், மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிறுகளில் காலை 11:00 முதல், இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு. தொடர்புக்கு ngma.gmail.comஎன்ற மின்னஞ்சலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை