உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக...

ஆன்மிகம் ஆவணி அமாவாசை ஆவணி அமாவாசையை ஒட்டி, நகரின் பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி; மலர் அலங்காரம் - 7:00 மணி; மஹா மங்களாரத்தி - 8:00 மணி; உற்சவர் ஊஞ்சல் சேவை, பம்பை உடுக்கையுடன் பக்தி பாடல்கள் - மதியம் 12:00 மணி; மஹா மங்களாரத்தி - 1:00 மணி; அன்னதானம் - 1:30 மணி; பம்பை உடுக்கையுடன் அங்காள அம்மன் தாலாட்டு - 2:30 மணி; சக்தி கரகம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். சுப பிரம்மச்சாரி ஹோமம், நாக தோஷ நிவாரண ஹோமம், கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், சுப்ரமண்ய ஹோமம், தன்வந்த்ரி ஹோமம் - காலை 9:00 மணி. இடம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், மல்லேஸ்வரம். அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் - காலை 5:00 மணி; கலசம், விளக்கு, வேள்வி பூஜை, அமாவாசை ஹோமம், பக்தர்களுக்கு பிரசாதம் - மாலை 6:00 மணி. இடம்: ஆதிபராசக்தி சக்தி பீட கோவில், ஜீவன் பீமா நகர். தொடர்புக்கு: 88926 83899 - எல்.வி.நாராயணப்பா. சிறப்பு அபிஷேகம் - காலை 8:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 11:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர். தொடர்புக்கு: 93432 11122 - நாகேந்திர பிரசாத். அபிஷேகம் - 7:00 மணி; மஹா மங்களரத்தி - 9:00 மணி; காளி பூஜை - மதியம் 12:00 மணி; பிரத்யங்கிரா ஹோமம் - மாலை 6:30 மணி; அபிஷேகம் - இரவு 9:00 மணி; அலங்காரம் - நள்ளிரவு 12:00 மணி. இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், மாகடி சாலை. தொடர்புக்கு: 93437 37609 - வெங்கடேஷ். வேம்பு அம்மன், வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் - காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை; பக்தர்களுக்கு தாயத்து கட்டுதல், திருஷ்டி கழித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வராஹி அம்மன் தேவி கோவில், 6 வது கிராஸ், கே.பி., அக்ரஹாரா, பெங்களூரு. தொடர்புக்கு: 98452 25923 - சுரேஷ். லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது விற்பனை, கண்காட்சி சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. நாடக பயிற்சி முகாம் கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை; மறையுரை, கொடியேற்றம் - மாலை 5:30 மணி; நற்கருணை ஆசிர் - 6:30 மணி. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76187 39343. கண்காட்சி பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஓவியங்கள், சிலைகள்' கண்காட்சி - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிறுகளில் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு. தொடர்புக்கு ngma.gmail.comஎன்ற மின்னஞ்சலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இசை கன்னடா ஜாமிங் - இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். கரோக்கி லைவ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர். காமெடி வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. மிட் நைட் காமெடி ஷோ - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி