உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக...

ஆன்மிகம் விநாயகர் சதுர்த்தி  விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, நகரின் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடக்கின்றன. சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், மலர் அலங்காரம் - அதிகாலை 5:00 மணி; தரிசனம் - காலை 8:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: ஸ்ரீ லேக்வியூ மஹா கணபதி கோவில், டாங்க் சாலை, ஹலசூ ஏரி அருகில்.  ஸ்ரீ வஞ்சகல்ப மஹா கணபதி ஹோமம், 108 சங்கு ஸ்தாபனம், 108 கரும்பு, 108 வெல்லம், 108 திர்வியம் ஆஹதி - மாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ தண்டாயுதபானி கோவில், கங்காதர செட்டி, ஹலசூரு.  மஹா கணபதி ஹோமம் - காலை 6:30 மணி; மஹா அபிஷேகம் - 8:00 மணி; மஹா மங்களாரத்தி - 9:30 மணி; உற்சவர் அபிஷேகம் - 10:00 மணி; விநாயகர் ஊர்வலம் - 11:00 மணி; சந்தன அலங்காரம் - மாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:30 மணி. இடம்: ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில், காக்ஸ்டவுன்.  அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா படையல், தீபாராதனை, பிரசாத வினியோகம் - காலை 10:00 மணி. இடம்: கணபதி கோவில், கணேஷ்புரம், ராபர்ட சன் பேட்டை.  சந்தன அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, சிறப்பு பூஜைகள், மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். மாலை 6:00 மணி. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், ஈ.டி. பிளாக், உரிகம், தங்கவயல்.  பாலாபிஷேகம், அலங்காரம், படையல், தீபாராதனை, பிரசாத வினியோகம்- மாலை 7:00 மணி. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், மருத்துவமனை டாக்டர்கள் காம்பவுண்ட், ராபர்ட்சன்பேட்டை.  அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரசாத வினியோகம். மாலை 6:30 மணி. இடம்: கன்னிகாபரமேஸ்வரி கோவில், 2வது கிராஸ், ராபர்ட்சன்பேட்டை. பொது பள்ளிகள் இடையே போட்டி  டா க்டர் எம்.வி.கோபாலசுவாமி நினைவு பள்ளிகள் இடையேயான போட்டி. மாறுவேட போட்டி, ஓவியம், செய்தித்தாள் வாசிப்பு, பகவத் கீதை பாராயணம் - காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை. இடம்: கோபாலசுவாமி உயர்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம், மைசூரு. விற்பனை, கண்காட்சி  சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்டு கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. நாடக பயிற்சி முகாம்  கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை; மறையுரை, கொடியேற்றம் - மாலை 5:30 மணி; நற்கருணை ஆசிர் - 6:30 மணி. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76187 39343. கண்காட்சி  பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஓவியங்கள், சிலைகள் கண்காட்சி - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு. தொடர்புக்கு ngma.gmail.comஎன்ற மின்னஞ்சலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை