உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வனவிலங்கு தகவல் தெரிவிக்க இலவச எண் அறிமுகம்

 வனவிலங்கு தகவல் தெரிவிக்க இலவச எண் அறிமுகம்

பெங்களூரு: வன விலங்குகள் ஊருக்குள் நுழைந்தவுடன் வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க இலவச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் வனப்பகுதி அருகில் வன விலங்கு - மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க வனத்துறை சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவு: காட்டிலிருந்து வன விலங்குகள் ஊருக்குள் நுழைந்தால் '1926' என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம். தகவல் கிடைத்தவுடன் வன அதிகாரிகள் விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பர். இதை உயர் அதிகாரிகள் கண்காணிப்பர். வன எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். புலிகள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க பிரத்யேக குழுக்கள் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை