உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பாதையில் மீண்டும் கடை போட்ட வியாபாரிகள்

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பாதையில் மீண்டும் கடை போட்ட வியாபாரிகள்

மல்லேஸ்வரம்: மல்லேஸ்வரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நடைபாதையை, தெருவோர வியாபாரிகள் மீண்டும் ஆக்கிரமித்ததால், பாதசாரிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். பெங்களூரில் சாலையோரங்களில் உள்ள நடைபாதைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்தன. மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள நடைபாதைகளில் கடை வைத்திருந்த ஏராளமான வியாபாரிகளின் கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நடைபாதையில், மீண்டும் கடை வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும் என, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்தார். இந்நிலையில், தசரா உள்ளிட்ட ப ண்டிகைகள் வரவிருப்பதால், மல்லேஸ்வரம் காயத்ரிநகர் மெயின்ரோடு, சம்பிகே சாலையில் உள்ள நடைபாதைகளில், தெருவோர வியாபாரிகள் மீண்டும் நேற்று ஆக்கிரமிப்பு செய்தனர். நடைபாதைகளில் பாதசாரிகள் நடக்க முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. இதனால், பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இவ்விஷயத்தில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதசாரிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி