இடமாற்ற காலக்கெடு நீட்டிப்பு
பெங்களூரு: அரசு ஊழியர்களின் இடமாற்றத்துக்கான காலகெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக அரசின் பல துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 15ம் தேதியில் இருந்து மே 31ம் தேதி வரை காலகெடு விதித்து அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் அந்த காலகெடுவை அரசு நீட்டித்து உள்ளது. இம்மாதம் 30ம் தேதி வரை, இடமாற்றம் கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று அரசின் நிர்வாகம் மற்றும் பணியாளர் சீர்திருத்த ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டு உள்ளது.